Monday, May 20, 2024
Home » வண்ணத்துப்பூச்சிகள் தொடர்பான அறிவிலும், உணர்விலும் திளைக்கச் செய்யும் Spa Ceylon முயற்சி

வண்ணத்துப்பூச்சிகள் தொடர்பான அறிவிலும், உணர்விலும் திளைக்கச் செய்யும் Spa Ceylon முயற்சி

by Rizwan Segu Mohideen
April 9, 2024 3:24 pm 0 comment

இலங்கையிலேயே முதல்முறையாக “வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம்” (Butterfly Paradise) என்ற, பல்லுணர்வுகளைத் தூண்டி, அறிவிலும், உணர்விலும் திளைக்கச் செய்யும் அனுபவத்தை வழங்கும் முயற்சியை  Spa Ceylon நிறுவனம், One Galle Face Mall இல் ஆரம்பித்து வைத்துள்ளது. 2024 ஏப்ரல் 5 முதல் 7 வரை இடம்பெற்ற Butterfly Avurudu Gallery உடன் ஏககாலத்தில் இந்த முயற்சி இடம்பெற்றது. இம்முயற்சியானது  வண்ணப்பூத்துக்களை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னின்று வழிநடத்தும் அதேசமயம், வண்ணத்துப்பூச்சிகளின் உலகில் சஞ்சரித்து, அதில் திளைக்கச் செய்யும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகின்ற,  தொலைநோக்குடனான ஒரு செயற்திட்டமாக காணப்படுகின்றது.  

பல்லுயிரின வளம் நிரம்பிய இலங்கையில், 248 இற்கும் மேற்பட்ட வகையிலான அழகிய வண்ணத்துப்பூச்சி இனங்கள் உயிர் வாழ்வதுடன், அவற்றுள் 76 இற்கும் மேற்பட்ட இனங்கள் அழிவடைந்து போகும் தருவாயில் உள்ளன.

ஆகவே வண்ணத்துப்பூச்சி இனங்களை அழிவடையாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து, இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து 2017 ஆம் ஆண்டிலேயே Spa Ceylon நிறுவனம் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. கடந்தகாலங்களில் வஸ்கமுவ என்ற இடத்தில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசமொன்றை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளதுடன், இது இயற்கையாகவே 52 க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களை ஈர்த்துள்ளதுடன், அதில் 8 அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முயற்சியின் தொடர்ச்சியாகவே தற்போதைய முயற்சியும் அமைந்துள்ளதுடன், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடங்களை வளப்படுத்தி, அவற்றை மீட்டெடுப்பதற்காக தற்போது வெஹெரகல எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான பூங்காக்களை அமைக்கும் பணிகளை இவ்விரு அமைப்புகளும்  ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் தொடர்பில் உள்நாட்டில் அறிவை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் மீது வண்ணத்துப்பூச்சிகளின் வகிபாகம், குறிப்பாக விவசாய சமூகங்களுக்கு நற்பயனளிக்கும் மகரந்தச் சேர்க்கைகள் தொடர்பாக அறிவை வளர்த்து, ஊக்குவிப்பதே இச்செயற்பாட்டின் நோக்கமாக உள்ளது.   

ஆக்கபூர்வமான வழிகளில் வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாக்கும் முயற்சிகளை பற்றி அறிவூட்டி, வலுப்படுத்துவதற்காக, வண்ணத்துப்பூச்சிகளின் உலகில் சஞ்சரித்து திளைக்கச்செய்யும் மேற்குறிப்பிட்ட தனித்துவமான அனுபவம் இலங்கையில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறுதல் மற்றும் அறிவு ஆகியவற்றை இணைத்து, இங்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு  பல்லுணர்வுடனான புத்துணர்ச்சியூட்டும் பயணத்துடன், Spa Ceylon வழங்கும் De-Stress வகை உடல் ஆரோக்கிய பண்புகளையும் இணைத்து, இது தொடர்பான செய்தி மற்றும் வரலாற்றைப் பரப்புவதில் augmented reality போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த்தி  அமைதியான மற்றும் ஆறுதலான அனுபவத்தையும் விருந்தினர்கள் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட இந்த செயற்றிட்டம் வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது. விருந்தினர்களுக்கு அவர்களது உணர்வுகளை உச்சப்படுத்தி, வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாப்பது தொடர்பான ஆழமான அறிவினை உட்புகுத்தி, மறக்க முடியாத அனுபவத்தில் அவர்கள் மூழ்கித் திளைக்க இசெயற்றிட்டம் உதவியாக இருந்தது. 

 

Spa Ceylon இன் இணை ஸ்தாபகர் ஷிவாந்த டயஸ் அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில், “ஆயுர்வேதத்துடன் தொடர்புபட்ட ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில் ‘சமநிலை’ என்பது எமது பூமியினதும், அங்கு வாழ்கின்ற மக்களினதும் நலனுக்கு மிகவும் முக்கியமானது என நாம் நம்புவதுடன், திளைக்கச்செய்யும் இந்த அனுபவம் என்பது Spa Ceylon வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாப்பதற்காக இதுவரை முன்னெடுத்துள்ள முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் இயற்கையைப் பாதுகாப்பதில் எமது ஒட்டுமொத்த அர்ப்பணிப்பின் அடையாளமாகவும் அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.       

Spa Ceylon இன் மற்றைய இணை ஸ்தாபகரான ஷலீன் பாலசூரிய அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போது: “இயற்கையை பாதுகாப்பதன் மீது எமது வர்த்தகநாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, எமது சமூகத்திற்கு நற்பயன் விளைவிக்கும் ஈடுபாட்டைத் தோற்றுவிப்பதில் தொடர்ந்தும் புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்கு எமக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. அறிவிலும், உணர்விலும் திளைக்கச் செய்த இந்த அனுபவம், வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாப்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாது, இலங்கை என்பது வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கபுரி என்ற செய்தியை உலகெங்கும் பரப்ப உதவும் முகமாக, Spa Ceylon இன் சர்வதேச பிரசன்னத்தினூடாக இலங்கையிலிருந்து உலகிற்கு இது எடுத்துச் செல்லப்படும்,” என்று குறிப்பிட்டார்.     

இலங்கை வனசீவராசிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பிரதிநிதி திரு. சமிந்த பெர்னாண்டோ அவர்கள் சூழக தொகுதியைப் பேணுவதில் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன், பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் Spa Ceylon நிறுவனத்தின் ஒத்துழைப்பினை போற்றிப் பாராட்டினார். மேலும், அறிவிலும், அனுபவத்திலும் திளைக்கச் செய்யும் இந்த முயற்சியுடன் கைகோர்த்துள்ளதை One Galle Face கடைத்தொகுதியும் பெருமையுடன் மேற்கொண்டுள்ளது.  

நாட்டிலுள்ள பல்வகைப்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களின் உத்வேகத்துடன், Spa Ceylon வழங்கும் வண்ணத்துப்பூச்சி-மையப்பட்ட தயாரிப்பு வரிசை, பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிப்பதுடன், இவற்றின் ஒவ்வொரு விற்பனை மூலமாகவும் கிடைக்கின்ற இலாபத்தின் ஒரு பங்கு, வணண்த்துப்பூச்சிகளைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. Spa Ceylon இன் வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் என்ற முயற்சியானது வண்ணத்துப்பூச்சிகளின் அழகு மற்றும் சூழலியல் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பிற்கு சான்றுபகர்வது மட்டுமன்றி, அற்புதமான இந்த உயிரினங்கள் எதிர்வரும் தலைமுறைகள் மத்தியிலும் நிலைபெறுவதை உறுதி செய்கின்றது.

2009 மே மாதத்தில், ஷிவாந்த டயஸ் மற்றும் ஷலீன் பாலசூரிய ஆகிய உடன்பிறப்புக்களால் ஸ்தாபிக்கப்பட்ட ‘Spa Ceylon’, சர்வதேச ஆடம்பர உடல் ஆரோக்கியத் துறையில் ஒரு வலிமையான சக்தியாக வேகமாக மாற்றம் கண்டுள்ளதுடன், உலகின் மிகப் பெரிய ஆடம்பர ஆயுர்வேத சங்கிலியாக மாறியுள்ளதுடன், தனது ஆடம்பர ஆயுர்வேத வர்த்தகநாமத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. பண்டைய இலங்கையின் அன்பினை வசப்படுத்தி, அதன் கம்பீரமான ஸ்பா பாரம்பரியங்கள், உடல், உள மற்றும் ஆன்மாவை ஆறுதல்படுத்தி, அமைதிப்படுத்தி மற்றும் ஓய்வளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மன்னர் காலத்து உடல் ஆரோக்கிய சூத்திரங்களை இணைக்கும் தனிச்சிறப்புடன் தனது சேவைகளை ‘Spa Ceylon’ நிறுவனம் வழங்கி வருகின்றது.   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT