Monday, May 20, 2024
Home » பட்டதாரிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தனது 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ள DIMO Academy

பட்டதாரிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தனது 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ள DIMO Academy

by mahesh
April 3, 2024 12:00 pm 0 comment

DIMO நிறுவனத்தின் கல்விப் பிரிவான DIMO Academy, அண்மையில் அதன் 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்தியிருந்தது. இதில் German Automobile Mechatronics டிப்ளோமா மற்றும் Automobile Mechatronics சான்றிதழ் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது திறமைகளை வெளிப்படுத்திய, D.G. கசுன் இந்துஜ விக்ரமரத்ன, U.L.D. சமத் மிலிந்த குணசிங்க, சியம்பலாபிட்டியகே இஷான் பியத்ரோ சில்வா ஆகியோர் இப்பட்டமளிப்பு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர்.

இவ்வருடம் டிப்ளோமா பட்டம் பெற்ற சிலர், தங்களுடைய பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக 4 புகழ்பெற்ற ஜேர்மன் நிறுவனங்களில் வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டமை இங்கு விசேட அம்சமாகும். DIMO Academy ஆனது, வாகனத் துறையுடன் ஏற்படுத்தியுள்ள ஒத்துழைப்பையும் தொழில்துறையில் தொடர்ச்சியாக மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கான அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதான மனித வள அதிகாரியும், குழுமத்தின் கல்விப் பிரிவை மேற்பார்வையிடும் திருமதி தில்ருக்ஷி குருகுலசூரிய இது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கையில், “DIMO Academy வழங்கும் இலவச Automobile Mechatronics சான்றிதழ் கற்கை மற்றும் மிகவும் பிரபலமான ஜேர்மன் Automobile Mechatronics டிப்ளோமா பாடநெறி ஆகியன, வாகனத் துறையில் சரியான திறன்களைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில் தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளன.சர்வதேச தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வாகனத் துறையில் அவர்களது வெற்றியை எம்மால் உறுதிப்படுத்த முடியும்.” என்றார்.

DIMO Academy ஆனது, அதன் தனித்துவமான சுய-கற்றல் அணுகுமுறை மூலம், மாணவர்கள் நடைமுறை ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. அத்துடன், DIMO நிறுவனத்தின் உயர்தர வாகன சேவை மையங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் தொழில்துறை நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT