Thursday, May 9, 2024
Home » கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட பங்களாதேஷ் கப்பலை மீட்க இந்திய கடற்படை போர்க் கப்பல் நடவடிக்கை

கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட பங்களாதேஷ் கப்பலை மீட்க இந்திய கடற்படை போர்க் கப்பல் நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
March 30, 2024 2:28 pm 0 comment

டிசம்பரில் இருந்து கடற் கொள்ளையர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது இந்து சமுத்திரத்தில் கவலைகளை தூண்டிவிட்டன, யெமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களால் தொடங்கப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

சோமாலியா கடற்கரையில் பங்களாதேஷ் கொடியுடன் கூடிய கப்பல் கடற்கொள்ளையர்களால் அண்மையில் கைப்பற்றப்பட்டதோடு 23 பணியாளர்கள் பணயக்கைதிகளாக பிடிபட்டனர்.

55,000 டொன் நிலக்கரியுடன் மொசாம்பிக் தலைநகர் மபுடோவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எம்.வி.அப்துல்லா கப்பல் பயணம் செய்து கொண்டிருந்த போது, தாக்குதலுக்கு உள்ளானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அறிவிப்பு கிடைத்ததும், நீண்ட தூர கடல் ரோந்து விமானம் உடனடியாக அனுப்பப்பட்டது . கப்பலின் பணியாளர்களின் நிலையை அறிய தகவல்தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தது. இருப்பினும், கப்பலில் இருந்து பதில் எதுவும் பெறப்படவில்லை” என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதோடு மீட்புப் பணிக்காக இந்திய போர்க்கப்பல் அனுப்பப்பட்டது. ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அனைத்து பங்காளதேச நாட்டவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது. சோமாலியாவின் பிராந்திய கடற்பகுதிக்கு வரும் வரை இந்திய கடற்படை போர்க்கப்பல் பங்களாதேஷ கப்பலுக்கு அருகாமையில் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டதாகவும் ” அறிவிக்கப்படுகிறது.

டிசம்பரில் இருந்து சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்திருப்பது கவலையை தூண்டிவிட்டுள்ளது. யெமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களால் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது..

“15-20 பேர் கொண்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் பங்களாதேஷ கப்பலை கடத்திச் சென்றனர்” என்று எம்.வி. அப்துல்லா கப்பலின் பிரதம நிர்வாக அதிகாரி மெஹருல் கரீம் கூறினார்.

யெமனின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹூதி போராளிகள், காசாவில் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், செங்கடல் மற்றும் வளைகுடாவில் பல ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச கடற் படைகள் வடக்கே ஏடன் வளைகுடாவிலிருந்து செங்கடலுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன, இந்த பாதுகாப்பு இடைவெளியை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT