Monday, April 29, 2024
Home » பாடசாலை தரப்படுத்தல் விரைவில் நடைமுறைக்கு
கல்வி மறுசீரமைப்பின் கீழ்

பாடசாலை தரப்படுத்தல் விரைவில் நடைமுறைக்கு

by sachintha
March 30, 2024 8:35 am 0 comment

கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி நிர்வாகத்தினூடாக மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் 01 முதல் 05 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படுமென்றார்.

இந்நிலையில் 06 முதல் 10 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் கனிஷ்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளாகவும் 10 முதல் 13 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் சிரேஷ்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளாகவும் வகைப்படுத்தப்படுமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT