Thursday, May 9, 2024
Home » கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைத்த இலங்கை மத்திய வங்கி!

கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைத்த இலங்கை மத்திய வங்கி!

- அதன் நன்மையை மக்களுக்கு வழங்குமாறு நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை

by Rizwan Segu Mohideen
March 26, 2024 1:08 pm 0 comment

இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நேற்று (25) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 9% இலிருந்து 8.5% ஆகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 10% இலிருந்து 9.5% ஆகவும் 0.5% இனால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இதன் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் சந்தை வட்டிவீதங்களை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி நிறுவனங்களிடம் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடைப்பட்ட காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்டமட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதை இயலச்செய்வதற்கு தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திகள் பற்றிய விரிவான மதிப்பீடொன்றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

இத்தீர்மானத்தை மேற்கொள்கையில் சபையானது ஏனையவற்றிற்கு மத்தியில், குறைவடைந்த கூட்டுக் கேள்வி நிலைமைகள், வரிக்கட்டமைப்பிற்கான அண்மைய மாற்றங்களின் பணவீக்கம் மீதான எதிர்பார்க்கப்பட்டதைக்காட்டிலும் குறைவான தாக்கம், மின்சாரக் கட்டணங்களுக்கான அண்மைய சரிப்படுத்தல் காரணமாக சாதகமான அண்மைக்கால பணவீக்க இயக்கவாற்றல்கள், மிகவும் நிலைநிறுத்தப்பட்ட எதிர்பார்க்கைகள், மிதமிஞ்சிய வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் இல்லாமை, சந்தை வட்டி வீதங்களில் கீழ்நோக்கிய போக்கினைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தேவை என்பன பற்றி சபை கருத்திற்கொண்டது. பொருளாதார நடவடிக்கையானது நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்கு சாரசரிக்கு கீழ் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமையினால், அண்மைய காலத்தில் பணவீக்கத்திற்கான சாத்தியமான இடர்நேர்வுகள் நடுத்தரகால பணவீக்கத் தோற்றப்பாட்டில் முக்கிய மாற்றத்தினைக் கொண்டிருக்காது என சபை அவதானத்தில் கொண்டது.

நாணயச் சபையானது நாணயத் தளர்த்தல் வழிமுறைகளின் விரிவான மற்றும் முழுமையான ஊடுகடத்தலுக்கான, குறிப்பாக நிதியியல் நிறுவனங்கள் மூலமான கடன்வழங்கல் வீதங்களுக்கும் இதனூடாக வரவிருக்கும் காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதைத் துரிதப்படுத்துவதற்குமான தேவையினை வலியுறுத்தியது.

இது தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் முழுமையான அறிவித்தல் வருமாறு…

press_20240326_Monetary_Policy_Review_No_2_2024_t

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

VAT அதிகரிப்பால் பணவீக்கம் 7% வரை உயர வாய்ப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT