Monday, May 20, 2024
Home » AAFI புதிய பணி்ப்பாளர் சபை நியமனம்

AAFI புதிய பணி்ப்பாளர் சபை நியமனம்

by Rizwan Segu Mohideen
March 20, 2024 3:44 pm 0 comment

மாற்று நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் சம்மேளனம் (AAFI) 2024 ஆம் ஆண்டுக்கான தனது புதிய பணிப்பாளர் சபையை நியமித்துள்ளது. 2023 டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் வட்டிசாரா மாற்று நிதித் தொழிற்துறையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும், அனைத்து இலங்கையர்களும் நாடும் இந்த பிரத்தியேகமான வங்கியியல் மற்றும் நிதியியல் மாதிரியினூடாக பயன் பெறுவதை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

வட்டிசாரா வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிற்துறையைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு தமது கருத்துகளை பேசுவதற்கு, கலந்துரையாடுவதற்கு மற்றும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பொதுவான தீர்வுகளுக்கு முன்வருவதற்கு அமர்வை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், ஊக்குவிப்பதாகவும் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாகவும் AAFI அமைந்துள்ளது. கணக்கீடு, வரி மற்றும் சட்டபூர்வ அம்சங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் சமமான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத் தரப்பினருடன் திரண்ட பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி செயலாற்றுவதிலும் சம்மேளனம் பங்களிப்பு வழங்குகின்றது.

இந்த சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டது முதல், AAFI இன் ஸ்தாபக தலைவராக ரவி அபேசுந்தர திகழ்ந்தார். அன்னாரின் அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் சம்மேளனத்துக்கான ஒப்பற்ற செயற்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து, புதிய பணிப்பாளர் சபையை நியமித்துள்ளதாக AAFI அறிவித்துள்ளது. பின்வரும் அங்கத்தவர்கள் பணிப்பாளர் சபையில் உரிய பொறுப்புகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • சித்தீக் அக்பர் – தலைவர்
  • சுரேஷ் ஆர் ஐ பெரேரா – உப தலைவர்
  • ரிஃப்கா சியார்ட் – செயலாளர்
  • இல்சாம் அவ்ஃபர் – உதவி செயலாளர்
  • பஹார் நயன் – பொருளாளர்
  • ஹிஷாம் அலி – உதவி பொருளாளர்

அண்மையில் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், ரவி அபேசூரிய அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட உறுதியான அடித்தளத்தின் அடிப்படையில் மேற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஆர்வமாக உள்ளதுடன், AAFI க்கு புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தை வழங்கி, தொடர்ந்து இயங்கவும் எதிர்பார்த்துள்ளனர்.

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவராக சித்தீக் அக்பர் திகழ்வதுடன், உப தலைவரான சுரேஷ் பெரேரா மற்றும் செயலாளரான ரிஃப்கா சியார்ட் ஆகியோர் முறையே, KPMG இன் வரி மற்றும் ஒழுங்குபடுத்தல் தலைமை அதிகாரிகளாக உள்ளனர். பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பஹார் நயன், NDB இல் இஸ்லாமிய வங்கியியல் அலகின் சிரேஷ்ட முகாமையாளராக திகழ்கின்றார். உப பொருளாளராக நியமிக்கப்பட்ட ஹிஷாம் அலி, HNB இன் பிரதி பொது முகாமையாளராகவும் திகழ்கின்றார். மேலும், உல செயலாளராக நியமிக்கப்பட்ட இல்சாம் அவ்ஃபர், LOLC ஃபினான்ஸ் AFSU பிரதம முகாமையாளராக திகழ்கின்றார்.

புதிய பணிப்பாளர் சபையின் வழிகாட்டுதலின் கீழ், இந்த பிரத்தியேகமான வங்கியியல் மற்றும் நிதியியல் மாதிரியின் முழு ஆற்றலையும் பெற்று முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த AAFI எதிர்பார்க்கின்றது.

அமானா வங்கி – AAFI இணைந்து ‘நிதியளிப்பு அடிப்படையிலான பங்காண்மை’ தலைப்பில் Webinar முன்னெடுப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT