Wednesday, May 8, 2024
Home » பொலன்னறுவை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முன்னணி

பொலன்னறுவை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முன்னணி

அன்றைய விவசாய குடியேற்ற திட்டமே காரணம்

by mahesh
March 20, 2024 9:18 am 0 comment

விவசாய குடியேற்றங்கள் ‘பொலன்னறுவையில் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போதைய தலைவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல் செயற்பட்டனர். அதனால்தான் இன்று அரிசி உற்பத்தியில் பொலன்னறுவை மாவட்டம் முன்னிலை வகிப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொவித்தார்.

நாளைய எதிர்காலத்திற்கான ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை கடந்த 16 – 17 ஆம் திகதிகளில் பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் .

இதன்போது உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார ‘எதிர்கால டிஜிட்டல் உலகை நோக்கி செல்லும் போது பொலன்னறுவையை வினைத்திறன்மிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும். இதுவே எமது நோக்கமும் இலக்குமாகும்.

தொழில் மற்றும்வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘கருசரு’ திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலில் முறை கண்ணியத்தையும்இ பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எதிர்பார்க்கிறோம். எனினும் இவ்வளவு காலமும் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன் போது முறைசாரா தொழிற்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் திறமைகள் மற்றும் திறன்கள் மட்டத்தை பரிசோதித்து அதற்கேற்ப அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT