Wednesday, May 8, 2024
Home » தினகரன் எனும் ஆலமரத்தின் விழுதுகளாக நின்றோர் ஏராளம்

தினகரன் எனும் ஆலமரத்தின் விழுதுகளாக நின்றோர் ஏராளம்

by damith
March 18, 2024 3:20 am 0 comment

மனிதனை மனிதனோடு இணைப்பது செய்தியே. ஆதிமனிதன் தொடங்கி இன்றுவரை செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதன் அக்காலத்தில் தான் சொல்ல வந்ததை சைகை முலமே தெரிவித்தான். காலம் செல்லச் செல்ல மனித நாகரிகம் வளர்ச்சி அடையத் தொடங்கியது.

அதேவேளை மனிதர்களுக்கு இடையிலான தொடர்பாடலும் பல பரிமாணங்களைக் கடந்து வந்தது. இறுதியாக இன்று நாம் ஊடகம் என்ற ஒரு மைல்கல்லில் நிற்கின்றோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்கள் தங்களுடைய தொடர்பாடலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். அவர்கள் துணியில் தங்களுடைய சித்திரங்கள் மற்றும் எழுத்துக்களை வடிவமைத்தார்கள். தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி அவர்களின் அடுத்த கண்டுபிடிப்பாகும்.

ஊடகம் தற்போது அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் தனது எண்ணங்களை பிரதிபலித்த மனிதவாழ்வில் பத்திரிகை என்னும் ஊடகம் பிரித்தானியர் காலத்திலேயே இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையின் பத்திரிகை வரலாற்றின் ஆரம்ப காலம் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமாகும். 1802 ஆம் ஆண்டு ‘த கவர்ன்மென்ட் கெஸட்’ என்னும் ஆங்கில வாரஇதழினை இலங்கையின் ஆங்கிலேய ஆட்சி நிர்வாகம் வெளியிட்டது. அரசின் அறிவித்தல்கள் அரசின் விளம்பரங்களைக் கொண்ட வர்த்தமானி பத்திரிகையாகவே இது அமைந்தது.

கோல்புறூக் பரிந்துரைகளில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதிருப்தியைத் தெரிவிக்க கொழும்பு வாழ் ஆங்கில வர்த்தகக் குழுவினால் 1834 ஆம் ஆண்டு ‘Observer and Commercial Advertiser ‘ என்னும் பத்திரிகை ஜோர்ச் வின்டர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு இலங்கையில் முதன்முதலாக பத்திரிகையாக வெளியிடப்பட்டது.

1918 இல் டி. ஆர்.விஜேவர்த்தன டெய்லி நியூஸ் நாளிதழை ஆரம்பித்தார் 1923 இல் சிலோன் ஒப்சேவரையும் தொடர்ந்து தினமின சிங்கள நாளிதழையும் விலைக்கு வாங்கினார். அவர் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் அதாவது பத்திரிகையின் தாய்வீடான லேக் ஹவுஸ் நிறுவனத்தை உருவாக்கினார்.

அந்நிறுவனத்தால் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதன் முதலாக தினகரன் எனும் தமிழ்மொழி பத்திரிகை வெளியிடப்பட்டது. 1948 மே 23 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்பட்டது.

தினகரன் பத்திரிகையின் பெரும் வளர்ச்சிக்காக ஆசிரியப் பீடத்தில் பணியாற்றியவர்கள் பலர்.

தினகரன் பத்திரிகை திறம்பட தொடர்ந்து வெளிவருவதற்காக தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஆலமரத்தின் விழுதுகளான அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களேயாவர்.

வீ.ஆர்.வயலட் தினகரன் ஆசிரியபீடம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT