Saturday, May 11, 2024
Home » 2022 முதல் வவுனியாவில் 68 யானைகள் மரணம்

2022 முதல் வவுனியாவில் 68 யானைகள் மரணம்

- பல்வேறு பொறிகளில் சிக்கி 41 யானைகள் பலி

by Rizwan Segu Mohideen
March 6, 2024 1:28 pm 0 comment

– புகையிரத விபத்துகளில் 27 யானைகள் மரணம்

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 68 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வவுனியா வனஜீவராசி அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 41 காட்டு யானைகள் விவசாயிகளின் மின் பொறிகள், வெடிமருந்துகள் போன்றவை காரணமாகவும், 27 யானைகள் புகையிரத விபத்துகள் உள்ளிட்ட ஏனைய விபத்துகளாலும் இறந்துள்ளன. ஏரியொன்றின் சேற்றில் சிக்கி உயிரிழந்த யானை ஒன்றும் இதில் உள்ளடக்கம்.

அந்த வகையில், வவுனியா மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் காட்டு யானைகளின் மரணத்தை தடுக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக இப்பகுதியிலுள்ள கிராம அலுவலர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியைப் பெறுவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக, வவுனியா வனஜீவராசி அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT