Saturday, May 11, 2024
Home » ஆரம்ப பிரிவு மாணவர்களின் உணவுக்கான தொகை ரூ. 85 இலிருந்து 110 ஆக அதிகரிப்பு

ஆரம்ப பிரிவு மாணவர்களின் உணவுக்கான தொகை ரூ. 85 இலிருந்து 110 ஆக அதிகரிப்பு

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 13 முடிவுகள்

by Prashahini
March 5, 2024 9:27 pm 0 comment

– விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
– சீதாவக்க பிரதேச நூதனசாலையை தாபித்தல்

அரச பாடசாலைகளில் 1-5 ஆம் தரங்களிலுள்ள மாணவர்களுக்கான “பாடசாலை உணவு வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 08 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த 1.08 மில்லியன் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் 100 கல்வி வலயங்களிலுள்ள 7,902 பாடசாலைகளில் “பாடசாலை உணவு வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ஒரு மாணவருக்கு ஒரு நாள் உணவு வேளைக்கு 85/= பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஏற்படுகின்ற பண்டங்கள் சேவைகளின் விலை ஏற்றத்தாழ்வுகளுக்கமைய ஒருவேளை உணவுக்கு 110/= செலவாவதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், “பாடசாலை உணவு வேலைத்திட்டம்” இற்காக Save the Children நிறுவனத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 917 பாடசாலைகளில் 02 இலட்சம் மாணவர்களுக்கு 03 வகையான உணவுப் பொருட்களை வழங்கவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇ ஒருவேளை உணவுக்காக ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையை 110/= ரூபாவாக அதிகரிப்பதற்கும், ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் 170 நாட்களுக்கு “பாடசாலை உணவு வேலைத்திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. முதலீட்டுப் பணிகளுக்காக அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களிடமுள்ள காணிகள், முறையான வகையில் விடுவிப்பதற்காக காணி முகாமைத்துவப் பொறுப்பு நிதியத்தைத் தாபித்தல்

எமது நாட்டின் மொத்த நிலப்பரப்பின் 82 வீதமான நிலம் அரசுக்குச் சொந்தமாகக் காணப்படுவதுடன், குறித்த காணிகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பல நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாளாமல் இருப்பதால், அரச காணிகளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், புதிய தொழிற்சாலைகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு இயலுமாகும் வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்காக, பொருத்தமான காணிகளை அடையாளங்காணும் சந்தர்ப்பத்திலிருந்து வெளிப்படையான பொறிமுறையைக் கடைப்பிடித்து முதலீட்டாளர்களுக்கு முறைசார்ந்த வகையில் காணிகளை விடுவித்தல் வரைக்குமான சரியான அதிகாரங்களைக் கொண்ட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.

அதற்கமைய, அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களிடமுள்ள காணிகளை முதலீட்டாளர்களுக்கு விடுவிப்பதற்குரிய பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையின் கீழ் ஏற்புடைய அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய காணி முகாமைத்துவப் பொறுப்பு நிதியத்தைத் தாபிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பக் (ICT) கல்வியை மேம்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு தொழிற்துறையை அபிவிருத்தி செய்தல்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்திற்கமைய பொருளாதார விருத்தி மற்றும் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) கல்வியை மேம்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு தொழிற்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு தொழிற்துறையின் பேண்தகு அபிவிருத்திக்காக தேவையான திறன்வாய்ந்த தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதற்கு இயலுமை கிடைக்கும். அனுமதிப்பத்திர உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் தொலைத்தொடர்பு அபிவிருத்திக் கட்டணத்தின் 50 வீதம் தொலைத்தொடர்பு தொழிற்துறையின் விருத்திக்காக பயன்படுத்துவதற்கோ அல்லது வழங்குவதற்கோ தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, க.பொ.த (உ/தரம்) பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தைப் பாடமாக கற்பிக்கின்ற 1,000 பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தொலைத்தொடர்பு அபிவிருத்திக் கட்டண நிதியத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் “மிடுக்கான பாடசாலைக் கருத்திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கும், ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாட்டு ஒத்துழைப்புக்களுடன் க.பொ.த (உ/தரம்) பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்தைக் கற்றுக் கொள்கின்ற 5,000 குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குகின்ற புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும், தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. பொதுச் சுங்கப் பிணைக்குதம் (Bonded warehouse) நிர்ணயித்தல் தொடர்பான கொள்கைச் சட்டகத்திற்கான அனுமதி

இறக்குமதிப் பொருட்களுக்கு வரி செலுத்துவதற்கும் மற்றும் பண்டங்களை ஏற்றிச் செல்வதற்கும் முன்னர் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் தரப்பண்பை உறுதிப்படுத்துவதற்கான களஞ்சிய வசதிகள் சுங்க பிணைக்குதம் என அழைக்கப்படும். (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 69 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் சுங்கப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் விதந்துரைக்கமைய நிதி விடயதானத்திற்குப் பொருத்தமான அமைச்சருக்கு சுங்கப் பிணைக்குதத்தினை நிர்ணயிக்கலாம். பிணைக்குத வசதிகள் தொழிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விநியோகச் செயன்முறையில் போட்டித்தன்மையான அனுகூலங்களை உருவாக்குவதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சுங்கப் பிணைக்குதம் (Bonded warehouse) கட்டாய குறைந்தபட்ச இடப்பரப்பின் அளவு திருத்தப்ப்படல் வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 69 ஆம் பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பொதுச் சுங்கப் பிணைக்குதத்தை (Bonded warehouse) நிர்ணயித்தல் தொடர்பான திருத்தப்பட்ட மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட கொள்கைச் சட்டகத்தை” நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. பணையத் தீநிரலுக்கு (Ransomware) எதிரான சர்வதேச தொடக்கமுயற்சி மாநாடு

பணையத் தீநிரலை (Ransomware) ஒழிப்பதற்காக சர்வதேச ஒருங்கிணைப்புக்காக ஐக்கிய அமெரிக்கா மேலும் பல நாடுகளுடன், 2021 ஆம் ஆண்டில் பொதுத்தளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பணையத் தீநிரலுக்கு (Ransomware) எதிரான சர்வதேச தொடக்கமுயற்சிப் படிமுறைகளுடன் இணைந்து கொள்ளுமாறு இலங்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த தொடக்கமுயற்சிகளுக்காக உலகளாவிய ரீதியில் 48 நாடுகளும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச பொலிசாரும் இணைந்துள்ளனர். இலங்கை அண்மையில் பணையத் தீநிரலுக்கு (Ransomware) காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், பணையத் தீநிரலுக்கு (Ransomware) எதிரான சர்வதேச தொடக்கமுயற்சிகளுடன் இணைந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பணையத் தீநிரலுக்கு (சுயளெழஅறயசந) எதிரான சர்வதேச தொடக்கமுயற்சிக்கும், அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. ஒரு மெகாவாற் இயலளவு கொண்ட இரண்டு மிதப்பு சூரிய மின்னுற்பத்தி முன்னோடிக் கருத்திட்டங்கள் சந்திரிக்காவாவி நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பிலும் கிரிஇப்பங்வாவி நீர்த்தேக்க மேற்பரப்பில் ஆரம்பித்தல்.

கொரிய அரசின் Korea Institute for Advancement of Technology மற்றும் இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டு கலந்துரையாடல் குறிப்புக்கமைய , சந்திரிக்கா வாவி மற்றும் கிரிஇப்பங்வாவி நீர்த்தேக்கங்களில் ஒரு மெகாவாற்று இயலளவு கொண்ட இரண்டு (02) மிதப்பு சூரிய மின்னுற்பத்தி நிலையங்களின் முன்னோடிக் கருத்திட்டங்களுக்கு ஏற்புடைய மின்னுற்பத்தி நிலையம் மற்றும் மின்மாற்றி உபநிலையங்களை நிர்மாணித்தல், பராமரிப்புத் தொழிலாளர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் சூரிய மின்தகடுகளை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிரிஇப்பங்வாவி நீர்த்தேக்கத்தின் நீர்ப்பரப்பில் 0.99 ஹெக்ரயார் அளவிலான பகுதி மற்றும் குறித்த நீர்த்தேக்கத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் 0.1 ஹெக்ரெயார் அளவிலான காணித்துண்டுகளை வழங்குமாறு கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய மின்வலுக் கட்டமைப்புக்கு 03 மணித்தியாலய கிகாவோற்று மின்சாரத்தை சேர்த்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டும். அதற்கமைய, குறித்த இரண்டு சூரிய மின்னுற்பத்தி முன்னோடிக் கருத்திட்டங்களை மேற்கொண்டு செல்வதற்காக மேற்குறிப்பிட்ட நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பிலான பகுதிகள் மற்றும் காணித்துண்டுகளை வருடாந்தக் குத்தகை அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் இலங்கை நிலைபெறுதகு எரிசக்தி அதிகாரசபைக்கு வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கையின் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (BIDTI) மற்றும் நேபாளத்தின் வெளிவிவகார நிறுவனத்திற்கும் (IFA) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையின் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (BIDTI) மற்றும் நேபாளத்தின் வெளிவிவகார நிறுவனத்திற்கும் (IFA) இடையில் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிப் பரிமாற்றங்களை அதிகரிக்கும் நோக்கில் 2018.09.01 தொடக்கம் 04 வருடங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலப்பகுதி 2022 ஆண்டில் முடிவடைந்துள்ளது. இருதரப்பு உடன்பாட்டுக்கமைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயற்பாட்டுக் காலப்பகுதியை ஐந்தாண்டுக்கு (05) ஒருமுறை நீடிப்பதற்கும் இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை திருத்தம் செய்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சமாதான நீதவான்கள் (நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை மற்றும் நடத்தைக் கோவை) ஒழுங்குவிதிகள்

1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 45(6) ஆம் பிரிவின் மூலம் சமாதான நீதவான்களின் பதவியை இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை மற்றம் முடிவுறுத்துகை போன்ற ஒழுங்குவிதிகளை உருவாக்குவதற்குள்ள அதிகாரங்களின் பிரகாரம் நீதித்துறை விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சமாதான நீதவான்கள் (நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை மற்றும் நடத்தைக் கோவை) ஒழுங்குவிதிகள், அதன் பின்னர் குறித்த கட்டளைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் கிரமமாக 2023.11.27 மற்றும் 2024.02.13 திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

உலகில் நவீன தொழிநுட்பம் மற்றும் புதிய அறிவைப் பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல் மற்றும் பாரிய பரிமாற்றங்களை ஏற்படுத்திய ஏனைய நாடுகளை மாதிரியாகக் கொண்டு இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் விவசாய மற்றும் மீன்பிடித்துறை நவீனமயப்படுத்தல் சபைகளைப் பலப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 2.5 பில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி விவசாய நவீனமயப்படுத்தல் மத்திய நிலையத்தை (Agriculture modernization Hub) உருவாக்கி குறுகியகால, நடுத்தரகால மற்றும் நீண்டகால திட்டமிடல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டமாக 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட 03 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில் 75 பிரதேச செயலகப் பிரிவுகளில் நவீனமயப்படுத்தல் கருத்திட்டங்களை நடைமறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, முதலாம் கட்டத்தில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் விவசாய நவீனமயப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு 25 மில்லியன் ரூபாய்கள் வீதம் 650 மில்லியன் ரூபாய்கள் மற்றும் விவசாய திணைக்களம், ஏற்றுமதி விவசாய திணைக்களம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், கறுவா அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இலங்கை தேசிய நீரியல் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களுக்கு 35 மில்லியன் ரூபாய்கள் வீதம் 175 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. வரலாற்றுப் புகழ்வாய்ந்த சீதாவக்க பிரதேச நூதனசாலையை தாபித்தல்

1521 ஆம் ஆண்டில் உருவாகிய இராசதானிகளில் சிறப்புவாய்ந்த திருப்புமுனைகளாக அமைகின்றதும் ஆனாலும், குறித்த இராசதானியின் பிரதேச அடையாளங்களைக் காட்சிப்படுத்துவதற்கு இதுவரை ஒரு இடமும் ஒதுக்கப்படவில்லை. அதனால்இ சீதாவக்க இராசதானி காலத்தில் தயாரிக்கப்பட்ட சிங்கள துப்பாக்கி, சிங்கள வாள் உள்ளிட்ட போர் உபகரணங்கள், நிறுவை, அளவை மற்றும் அகழ்வு உபகரணங்கள் போன்ற தொல்லியல் பொருட்களும், சீதாவக்க இராசதானிக்குச் சொந்தமான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், மக்களிடமுள்ள பொருட்களும் அடையாளங் காணப்பட்ட பண்டையகாலத்திற்குரிய கற்கருவிகள், பண்டையகால மனிதனால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் உணவு தொடர்பான தகவல்களைப் போலவே விலங்குகள் மற்றும் தாவர ஒதுக்கங்களை முறையான வகையில் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்துவதற்காக நூதனசாலையொன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சீதாவக்க பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளஇ தற்போது குறைப்பயன்பாட்டு நிலையிலுள்ள இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த நூதனசாலையை அமைப்பதற்காக பிரதமர் மற்றும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பித்தல்

இலங்கையில் அனுமதிபெற்ற வங்கிகளுக்கு முறைசார்ந்த வகையில் வங்கிகள் மூலம் வெளிநாட்டு பண அனுப்பல்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2022.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த முன்மொழிவுத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2024.06.30 வரை நீடிப்பதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஏற்பாடுகளைத் தயாரித்து 1969 ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. காலித் துறைமுகம் வாணிப மற்றும் பொழுதுபோக்குத் துறைமுகமாக அபிவிருத்தி செய்தல்

காலித் துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொழுதுபோக்குச் செயற்பாடுகளுக்கு ஏற்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரச-தனியார் பங்குடமை அடிப்படையில் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விருப்பக்கோரலுக்கு 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அலைதாங்கி, ஆழ்கடல் படகுப்பயணிகள் இறங்குதுறை, தடுப்பு அணை, கடல் மதில், கால்வாய் வழி அகழ்வு மற்றும் காணி நிரப்பல் போன்ற கடல்சார் கட்டமைப்புக்கள் மற்றும் நிரப்பப்பட்ட காணிகளில் பின்னர் கலப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி வசதியளிக்கப்பட்டு நிர்மாணித்து, செயற்படுத்தி, ஒப்படைத்தல் அடிப்படையில் காலித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு கருத்திட்ட முன்மொழிவுக்கு முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விருப்பக்கோரல்/முன்மொழிவுக் கோரலுக்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கொழும்பு நகருக்கு அண்மையிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள கட்டடங்களை வணிக நிலையங்களாக மேம்படுத்தல்

கொழும்பு நகருக்கு அண்மையிலுள்ள வெள்ளவத்தஇ பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு போன்ற புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள நிலப்பரப்பு மற்றும் கட்டிடங்களை வணிக நிலையங்களாக மேம்படுத்துவதற்கான ஆற்றல்வளங்கள் காணப்படுவதாக 2023.11.06 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புகையிரத நிலையங்கள் மற்றும் தெஹிவல, கல்கிசை புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள நிலப்பரப்பு மற்றும் கட்டிடங்களை அரச-தனியார் பங்குடமையின் கீழ் நிர்மாணித்து, செயற்படுத்தி, ஒப்படைத்தல் பொறிமுறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும், அதற்காக ஆர்வங் காட்டுகின்ற முதலீட்டாளர்களிடம் விருப்பக்கோரல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT