Monday, May 6, 2024
Home » ரூபா. 2,000 கோடியில் 1,500 கி.மீ வீதிகளை புனரமைக்கும் திட்டம்

ரூபா. 2,000 கோடியில் 1,500 கி.மீ வீதிகளை புனரமைக்கும் திட்டம்

நாடளாவிய ரீதியில் நேற்று முதல் ஆரம்பம்

by Gayan Abeykoon
March 1, 2024 11:10 am 0 comment

நாடளாவிய ரீதியில் 1,500 கிலோ மீற்றர் வீதிகளை 2,000 கோடி ரூபா செலவில் புனரமைக்கும் திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று ஆரம்பமானது. 

கடுமையாகச் சேதமடைந்துள்ள வீதிகள், மண்சரிவுக்கு உள்ளான வீதிகள் மற்றும் அழிவுற்ற வீதிகளை புனரமைக்கும் நோக்கிலே, இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதை ஆரம்பித்து வைக்கும் வேலைகள், கஹதுடுவ, வெனிவேல்கொல  பாடசாலை மாவத்தை யில் இடம்பெற்றது. மூன்று கட்டங்களாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதற் கட்டமாக 500 கிலோமீற்றர் வீதிக்  புனரமைக்கப்படுகிறது.  இரண்டாம் கட்டம் மார்ச் 16  இல், ஆரம்பமாகி 500 கிலோ மீற்றர் தூரமும் மூன்றாம் கட்டம் ஏப்பரல் 02 இல், 500 கிலோ மீற்றர் தூரமும் காபர்ட் இடப்படவுள்ளது. நிகழ்வை ஆரம்பித்து வைத்துப் பேசிய அமைச்சர்:

1,500 கிலோமீற்றர் வீதிகளை மீள் புனரமைப்பு செய்வது மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.பருத்தித்துறையிலி ருந்து தேவேந்திரமுனை வரை ஒவ்வொரு பகுதியிலும் இத்திட்டம் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. மக்கள்  இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பெற்ற கடன்கள் மறுசீரமைக்கப்படும் வரை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி அல்லது எந்தவொரு   நாடும் எமக்கு மீண்டும் கடன் வழங்காது. இதையுணர்ந்த அரசாங்கம் கடனை மீளச்செலுத்துவது குறித்த உடன்படிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதன்படி, சுமார் 36 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை 25 வருட காலத்திற்குள் பல கட்டங்களின் கீழ் செலுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்திற்கு இலங்கை இணங்கியுள்ளது.   இந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டால், எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை நாட்டுக்கு கொண்டு வர முடியாது. உலகில் எந்த நாடும் எம்மை  ஏற்றுக்கொள்ளாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT