Sunday, April 28, 2024
Home » இளைஞர்களை கொன்றவர்களே நாட்டின் 75 வருட சாபத்துக்கு காரணம்

இளைஞர்களை கொன்றவர்களே நாட்டின் 75 வருட சாபத்துக்கு காரணம்

by sachintha
February 27, 2024 6:01 am 0 comment

நாட்டில், 1988-1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்களை கொன்று 30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் சகலருமே, நாட்டின் 75 வருட கால சாபத்திற்கு காரணம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி, வீடுகளுக்குத் தீ வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து,தோல்வியுற்றது. இதனால்,1983 இல்,மக்களைத் திரட்டி சொத்துக்களை எரித்தது. இவ்வாறு செய்தவர்கள்தான் முப்பதாண்டு யுத்தத்துக்கும் வழியேற்படுத்தினர்.

இவர்களே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள்.கடந்த காலங்களில் போராடி வீடுகளை எரித்தவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தமை மற்றும் சுற்றுலாவை சீரழித்ததற்கும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT