Sunday, April 28, 2024
Home » புதிய கடற்றொழில் சட்ட வரைபு ஒரு மாதத்தில் சபையில் சமர்ப்பிப்பு

புதிய கடற்றொழில் சட்ட வரைபு ஒரு மாதத்தில் சபையில் சமர்ப்பிப்பு

உலக உணவு, விவசாய அமைப்பிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி

by Gayan Abeykoon
February 23, 2024 9:27 am 0 comment

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organization) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகள்  பங்கேற்ற சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில்  (21) நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை கடற்றொழில் சமூகத்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்காக Food and Agriculture Organization அமைப்பின் உதவியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இதற்காக தற்போது புதிய சட்டவரைபு உருவாக்கப்படுகிறது. கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி இச்சட்ட வரைபு தயாரிக்கப்படுகிறது.

அமைச்சரவையின் அனுமதியுடன் இப்புதிய கடற்றொழில் சட்டமூலம் ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இச்சட்டமூலத்தை தயாரிப்பதற்கு Food and Agriculture Organization தரப்பில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இலங்கை கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் எமது அறுவடைக்குப் பின்னரான பதிப்புகளை தடுப்பதற்கும் எமது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் Food and Agriculture Organization அமைப்பின் உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுகிறது.எதிர்காலத்தில் மீன்வளம் அழிவடையும் அபாயம் இருப்பதால் கூடுகளில் மீன்களை வளர்ப்பதற்கான உதவிகளை செய்து தர வேண்டும்.  உலகெங்கும்  இந்நடைமுறையுள்ளது.  கொடுவா (மோதா) போன்ற மீன் இனங்களை வளர்ப்பதற்கு உதவி பரியுமாறும் Food and Agriculture Organization பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை மீனவர்களுக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. தற்போது எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மீட்சிபெறும் வரை கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதன் போது Food and Agriculture Organization பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே கருத்து தெரிவிக்கையில்

அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக தமது அமைப்பு சாதகமாக பரிசீலிக்கும்.  இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை   பரிசீலனை செய்யும். புதிய கடற்றொழில் வரைபை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அரப்பணிப்பை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில்கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நயனா குமாரி சோமரத்ன Food and Agriculture Organization அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT