Monday, April 29, 2024
Home » பாகிஸ்தானில் கூட்டணி அரசுக்கு உடன்படிக்கை

பாகிஸ்தானில் கூட்டணி அரசுக்கு உடன்படிக்கை

by Rizwan Segu Mohideen
February 22, 2024 12:28 pm 0 comment

பாகிஸ்தானில் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இடையே உத்தியோகபூர்வ உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போது சிறை அனுபவித்து வரும் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்களை விடவும் இந்த இரு கட்சிகளும் குறைவான இடங்களையே வென்றிருந்தன. “இந்தக் கூட்டணி மக்கள் ஆணையை திருடும் செயல்” என்று இம்ரான் கான் கட்சி எக்ஸ் சமூகதளத்தில் சாடியுள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி ஷபாஸ் ஷரீப் மீண்டும் ஒருமுறை பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவிருப்பதோடு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆசிப் அலி சர்தாரி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

பிரதமரை தேர்வு செய்யும் பாராளுமன்ற வாக்கெடுப்பு பெப்ரவரி கடைசியில் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதோடு அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு வேறாக அடுத்த வாரங்களில் இடம்பெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT