Monday, April 29, 2024
Home » ஈரான் விற்ற விமானத்தை அமெரிக்கா பறிமுதல்

ஈரான் விற்ற விமானத்தை அமெரிக்கா பறிமுதல்

by mahesh
February 14, 2024 10:34 am 0 comment

ஈரானால் வெனிசுவேல அரச விமான சேவைக்கு விற்ற போயிங் 747 விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

18 மாதங்களுக்கு முன்னர் ஆர்ஜன்டீனாவால் தரையிறக்கப்பட்ட விமானத்தை திங்கட்கிழமை (12) பறிமுதல் செய்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஈரானின் மஹன் விமான சேவையினால் வெனிசுவேலாவுக்கு இந்த விமான விற்கப்பட்டது ஈரான் மீதான தடையை மீறும் செயல் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ஈரான் புரட்சிக் காவல் படையுடன் தொடர்புபட்டதாக இந்த விமான சேவை மீது அமெக்கா தடை விதித்தது. இந்நிலையில் ஆர்ஜன்டீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்து அந்த விமானம் 2022 ஜூலையில் தரையிறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT