124
மின்சார கொள்முதல் ஒப்பந்தம் கைச்சாத்து
மொனராகலை, சியம்பலாண்டுவ பகுதியில் 100 மெகாவாட் தரை மவுண்ட் சோலார் மின் திட்டத்துக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையுடன் ரிவிதனவி (பிரைவேட்) லிமிடெட் (Rividhanavi (Pvt) Limited) நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மின்சார சபையால் டெண்டர் கோரி விளம்பரப்படுத்தப்பட்டது.
2023 இல் மதிப்பிடப்பட்டு வழங்கப்பட்டது.
ரிவிதனவி திட்டத்துக்காக 27.5 கி.மீ நீளமான டிரான்ஸ்மிஷன் லைனையும் நிர்மாணிக்கவுள்ளனர்.