Thursday, May 9, 2024
Home » தென் சூடான் செல்லும் இலங்கை இராணுவ வைத்திய படையின் 10ஆவது குழு

தென் சூடான் செல்லும் இலங்கை இராணுவ வைத்திய படையின் 10ஆவது குழு

- குடும்பத்தினர் மற்றும் நாட்டை விட்டு இன்று பிரியாவிடை

by Rizwan Segu Mohideen
February 6, 2024 7:08 pm 0 comment

ஐ.நா. அமைதி காக்கும் கடமைக்காக, இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10ஆவது குழு, தென் சூடானில் செயற்படும் 2ஆம் மட்ட வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இன்று (06) அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது.

தென் சூடானுக்குச் செல்லும் 10ஆவது குழுவில் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம்.டி.ஜே. திஸாநாயக்க மற்றும் 2ஆம் கட்டளை அதிகாரி மேஜர் என்.ஐ. ரத்நாயக்க தலைமையில் 14 இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் 49 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 64 இராணுவ வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையிலிருந்து தென் சூடானுக்குச் செல்லும் 10ஆவது குழுவினரை வழியனுப்புவதற்காக, அவர்களது குடும்பத்தினர் மற்றும் இலங்கை இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீ.ஏ.சி. பெனாண்டோ மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீ.எல்.எஸ்.டபிள்யூ. லியனகே, மருத்துவ சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஜீ.கே.எச். விஜேவர்தன, இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எ.யூ.எஸ். வனசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT