Monday, April 29, 2024
Home » வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை 18 மாதங்களுக்குள் மேம்படுத்தினோம்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை 18 மாதங்களுக்குள் மேம்படுத்தினோம்

லிபியாவின் நிலைமைக்கு செல்லாமல் நாட்டை பாதுகாத்த பெருமை எமக்கே உரியது

by damith
February 6, 2024 6:50 am 0 comment

நாட்டை பொறுப்பேற்கும் சவாலை எவரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நாங்கள் நாட்டை பொறுப்பேற்றோம். நாட்டை நாங்கள் பொறுப்பேற்றிருக்காமல் விட்டிருந்தால், லிபியா போன்ற நிலைமைக்கு நாடு செல்ல இடமிருந்ததாக, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த எமது நாடு, .டி.எஸ்.சேனநாயக்கா உள்ளிட்ட தேசிய மதத் தலைவர்களுடன் உயிர் தியாகம் செய்து, முன்னெடுத்த போராட்டத்தாலே சுதந்திர தேசமாக மாறியது..

நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. கடந்த நான்கு வருட காலத்துக்குள் கொவிட் தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை போன்ற விடயங்கள் காரணங்களால்,அராஜக நிலைக்கு நாடு சென்றது.இந்நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை.75ஆவது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்ப டும்போது, மிகவும் துரதிஷ்ட நிலையிலே நாடு இருந்தது. நாட்டை பொறுப்பேற்கும் சவாலை யாரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் நாட்டை பொறுப்பேற்றோம்.

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளோம். 76ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் இந்த வருடத்துக்குள், மக்களின் கஷ்டங்கள் நீங்கக்கூடிய, செளபாக்கியம் கிடைகுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT