Wednesday, May 8, 2024
Home » பெப்ரவரி மாத லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமில்லை

பெப்ரவரி மாத லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமில்லை

- நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
February 2, 2024 10:48 am 0 comment

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12.5kg: ரூ.685 இனால் அதிகரிப்பு – ரூ. 4,250
5kg: ரூ.276 இனால் அதிகரிப்பு – ரூ.1,707
2.3kg: ரூ.127 இனால் அதிகரிப்பு – ரூ.795

இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் அது இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை கடந்த ஜனவரி 26ஆம் திகதி வழங்கி வைத்திருந்தது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து மேலும் ரூ. 1.5 பில்லியன் திறைசேரிக்கு

குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்பின்னர், குறித்த காசோலையை இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி ஸ்ரீயானி குலசிங்கவிடம், சாகல ரத்நாயக்க கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.685, ரூ.276, ரூ.127 இனால் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT