Monday, April 29, 2024
Home » சினோபெக் பெற்றோல், டீசல் ரூ. 3 குறைவாக விற்பனை

சினோபெக் பெற்றோல், டீசல் ரூ. 3 குறைவாக விற்பனை

- ஏனைய எரிபொருட்களின் விலைகள் சந்தை விலையில்

by Rizwan Segu Mohideen
February 1, 2024 10:26 am 0 comment

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், SINOPEC நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய,

பெற்றோல் 92: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 363 இலிருந்து ரூ. 368
பெற்றோல் 95: ரூ. 8 இனால் குறைப்பு – ரூ. 464 இலிருந்து ரூ. 456
ஒட்டோ டீசல்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 355 இலிருந்து ரூ. 360
சுப்பர் டீசல்: ரூ. 7 இனால் குறைப்பு – ரூ. 475 இலிருந்து ரூ. 468

அந்த வகையில் CPC மற்றும் LIOC ஆகியவற்றின் விலைகளிலும் பார்க்க, வழக்கம் போன்று பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை ரூ. 3 குறைவாக விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

அதன் ஏனைய எரிபொருட்களின் விலைகள் சந்தை விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT