Tuesday, May 14, 2024
Home » ஆப்கானுக்கு எதிரான இலங்கையின் 16 பேர் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

ஆப்கானுக்கு எதிரான இலங்கையின் 16 பேர் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

by Gayan Abeykoon
February 1, 2024 10:24 am 0 comment

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் 16 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதற்காக இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி நாளை (02) இலங்கைக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. இதற்கு தனஞ்சய டி சில்வா தலைமையில் 16 பேர் கொண்ட இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸ் உப தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்தில் தனஞ்சய டி சில்வாவுடன் திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் துடுப்பாட்ட வரிசையில் பலம் சேர்க்கின்றனர்.

அதேநேரம் பந்துவீச்சில் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ ஆகியோரும் பிரதான சுழல்பந்து வீச்சாளர்களாக பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர இளம் வீரர்களான லஹிரு உதார, மிலான் ரத்நாயக்க மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோரும் ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் 24 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க குணசேகர மற்றும் 27 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்னாயக்க முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை டெஸ்ட் குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு உதார, சாமிக்க குணசேகர, மிலான் ரத்நாயக்க.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT