Home » 2023 ஆம் ஆண்டில் மிக அதிகமான விருதுகளை வென்று மக்கள் வங்கி சாதனை

2023 ஆம் ஆண்டில் மிக அதிகமான விருதுகளை வென்று மக்கள் வங்கி சாதனை

by Gayan Abeykoon
January 24, 2024 10:00 am 0 comment

கடந்துசெல்லும் ஒவ்வொரு ஆண்டும் மென்மேலும் பலம்பெற்று வருகின்ற மக்கள் வங்கி, 2023 ஆம் ஆண்டில் பல்வகைப்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தக மேன்மைக்கான விருதுகளைச் சம்பாதித்துள்ளது. கடந்த 62 ஆண்டுகளாக தனது வாடிக்கையாளர்களை நிதியியல் ரீதியாக மேம்படுத்தி, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வலுவூட்டுவதில் வங்கி ஆற்றிவந்துள்ள பங்களிப்புக்களுக்கு இந்த அங்கீகாரங்கள் சிறந்த சான்றாக உள்ளன. தற்போது ரூபா 3 டிரில்லியனுக்கும் மேற்பட்ட திரட்டிய சொத்துக்களையும், 14.7 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ள இந்த வங்கி, தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த வங்கிச்சேவைகளையும் வழங்கும் வகையில், வலுவான டிஜிட்டல் அடிச்சுவட்டையும், நாடெங்கிலும் 747 சேவை மையங்களையும் கொண்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முன்னணி வகிக்கின்ற வங்கிகள் மத்தியில் மேன்மையை வெளிக்காண்பிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட Asia Money Awards விருதுகள் நிகழ்வில் மிகச் சிறந்த உள்நாட்டு வங்கி  மற்றும் பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் அரவணைப்பதில் மிகச் சிறந்த வங்கி ஆகியன மக்கள் வங்கி சம்பாதித்துள்ள மிகவும் நன்மதிப்புமிக்க சர்வதேச விருதுகளில் சிலவாகும். மேலும்,  Global Business Review Magazine Awards 2023 விருதுகள் நிகழ்விலும் சிறப்பாகப் பிரகாசித்துள்ள வங்கி, இலங்கையில் இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த வங்கிச்சேவை வழங்குனர் , இலங்கையில் மிகச் சிறந்த நுகர்வோர் டிஜிட்டல் வங்கி, இலங்கையில் மிகச் சிறந்த டிஜிட்டல் பணப்பை செயலி – பீப்பிள்ஸ் பே  , இலங்கையிலுள்ள மிகவும் அபிவிருத்தி சார்ந்த வங்கி , இலங்கையிலுள்ள மிகவும் நிலைபேணத்தகு வங்கி  ஆகிய விருதுகளையும் வங்கி வென்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு, டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டே மேற்குறிப்பிட்ட விருதுகள் தீர்மானிக்கப்பட்டன. Global Banking and Finance Review இல்  Global Banking and Finance Review என்ற அங்கீகாரத்தையும் மக்கள் வங்கி சம்பாதித்துள்ளது.

ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தரஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டி, 2022 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையில் வங்கி ஈட்டிய வெற்றியானது மிகவும் மதிப்புடைய  International ARC Awards 2023   நிகழ்வில் தங்க விருதை வென்ற ஒரேயொரு உள்நாட்டு வங்கி என்ற சாதனையை படைக்க வழிகோலியிருந்தது. அச்சிடல் மற்றும் தயாரிப்பிற்காக தங்க விருது, உட்புற வடிவமைப்பிற்காக வெள்ளி விருது, நிதியியல் புள்ளி விபரங்களுக்கு  கௌரவ விருது ஆகியவற்றை வங்கி வென்றிருந்தது. நிறுவன தொடர்பாடல்கள், ஆண்டறிக்கைககள் மற்றும் முதலீட்டாளர் தொடர்புபட்ட ஆக்கங்களுக்காக தலைசிறந்த சாதனைகளுக்கான அங்கீகாரத்தின் உச்சமாக ARC Awards  அமைந்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT