Saturday, May 11, 2024
Home » தொலைபேசி அழைப்புக்களில் அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல்

தொலைபேசி அழைப்புக்களில் அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல்

விழிப்புடன் செயற்பட பொலிஸார் எச்சரிக்கை

by gayan
January 23, 2024 6:40 am 0 comment

நாட்டின் பல்வேறு பகுதிகளில், அலைபேசி அழைப்புகள் செய்தும், பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமணிந்தும் மக்களை ஏமாற்றி, பணம் பறிப்பதற்கு, கும்பல் ஒன்று திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பொய்யாகக் கூறி பணம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தொடர்பில், பல்வேறு

பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

முல்லேரியா மற்றும் நவகமுவ பிரதேசங்களில் உள்ள ஒழுங்கை வீடுகளை குறிவைத்து இந்த அழைப்புகள் வந்துள்ளன. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் மற்ற பகுதிகளுக்கும் இது போன்ற அழைப்புகளை மேற்கொள்ளும் ஆபத்துகள் உள்ளன. பொலிஸ் அதிகாரிகளாக வேடமிட்டு ஆள்மாறாட்டம் செய்பவர்கள், இச் சம்பவங்களில் ஈடுபட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குற்றச் செயல்கள் மற்றும் தொடரும் பொலிஸ் விசாரணைகள், ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் சஹாரன் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட லாமென,பொதுமக்களை இக்கும்பல் அச்சுறுத்துகிறது. இதுபோன்ற அழைப்புகளைப் பெற்ற பல குடியிருப்பாளர்கள் மோசடி செய்பவர்களுக்கு ez cash மூலம் பணத்தை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு, சந்தேகநபர்களை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT