Monday, April 29, 2024
Home » ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் 15,000 பேருக்கு கடன் வசதிகள்

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் 15,000 பேருக்கு கடன் வசதிகள்

by damith
January 15, 2024 10:15 am 0 comment

‘அனைவருக்கும் வீடு’ அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் செயற்பாடுகளில் 15,000 பேருக்கு புதிய கடன்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

வீடுகளை திருத்தும் நடவடிக்கைகளுக்காகவே இந்த வீடமைப்புக்கடன்கள் வழங்கப்படுவதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வழிகாட்டலில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட மட்ட அலுவலகங்கள் மூலம் இந்த வீட்டுக் கடனை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டத் தின் மூலம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 7,650 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT