Thursday, May 9, 2024
Home » ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி ஆன்

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி ஆன்

by Rizwan Segu Mohideen
January 11, 2024 10:49 am 0 comment

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் நேற்று (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இளவரசி ஆன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இந்நிகழ்வை நினைவுக்கூரும் விதமாக ஜனாதிபதி மாளிகையிலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் இளவரசி ஆன் நினைவுக் குறிப்பொன்றை பதிந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின் விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்தடைந்த பிரித்தானிய இளவரசிக்கு பெரும் வரவேற்பு

நேற்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கை வந்தடைந்த பிரித்தானிய இளவரசிக்கு பெரும் வரவேற்பு…

கட்டுநாயக்கவில் உள்ள MAS தொழிற்சாலைக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்…

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம்…

Save the Children அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்திற்கும் விஜயம்

பிரித்தானிய இளவரசி ஆன், இலங்கைக்கான அரச விஜயத்தில் முதலாவதாக MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விஜயம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT