Sunday, April 28, 2024
Home » இந்தியாவிடம் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்க அணி

இந்தியாவிடம் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்க அணி

by gayan
January 4, 2024 8:25 am 0 comment

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 55 ஓட்டங்களுக்கே சுருண்டது.

கேப்டவுனில் நேற்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தென்னாபிரிக்கா மளமளவென்று விக்கெட்டுகளை பறிகோடுத்தது. இதனால் அந்த அணி 23.2 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது. இருவர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர். அதிரடியாக பந்து வீசிய மொஹமட் சிராஜ் 9 ஓவர்களில் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக பெறப்பட்ட மிகக் குறைந்த ஓட்டங்கள் என்பதோடு 1932க்குப் பின்னர் தென்னாபிரிக்காவின் மிகக் குறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது. இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா இன்னிங்ஸால் வெற்றியீட்டியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT