Sunday, April 28, 2024
Home » அத்தியாவசிய மருந்துகளை பங்களாதேஷ் கையளிப்பு
இலங்கைக்கு 24 வகையான

அத்தியாவசிய மருந்துகளை பங்களாதேஷ் கையளிப்பு

03 மாதங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும்

by mahesh
December 23, 2023 1:14 pm 0 comment

சுமார் 03 மாதங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கிய 01 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 24 வகையான அத்தியாவசிய மருந்துகள் நேற்று முன்தினம் (21) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் சுகாதார அமைச்சுக்களுக்கு இடையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பெறப்பட்டுள்ளன.

நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மூன்று மாதங்களுக்கு இலங்கையின் மருந்துத் தேவையை ஈடுசெய்ய போதுமானதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மருந்து நன்கொடை பங்களாதேஷின் மாநில மருந்துப் பிரிவான எசென்ஷியல் டிரக்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது என்று அமைச்சகம் மேலும் கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT