Sunday, April 28, 2024
Home » க்வாஜாவுக்கு ஆஸி.கிரிக்கெட் எச்சரிக்கை

க்வாஜாவுக்கு ஆஸி.கிரிக்கெட் எச்சரிக்கை

by gayan
December 14, 2023 10:20 am 0 comment

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான செய்தி ஒன்றை தனது பாதணியில் காண்பிப்பதற்கு திட்டமிட்ட அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் க்வாஜா எச்சரிக்கப்பட்டுள்ளார்.

க்வாஜா போட்டியின்போது “அனைத்து உயிர்களும் சமமானது” மற்றும் “சுதந்திரம் ஒரு மனித உரிமையாகும்” என்ற வாசங்களை எழுதிய பாதணியை அணியத் திட்டமிட்டிருந்தார். எனினும் தனிப்பட்ட செய்திகளை தடுக்கும் சர்வதேச விதியை க்வாஜா மதிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் பட் கம்மின்ஸ் மற்றும் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் க்வாஜாவுக்கு ஆதரவை வெளியிட்டபோதும் போட்டியில் அந்த பாதணிகளை அணியும் திட்டத்தை அவர் கைவிட்டுள்ளார்.

முஸ்லிம் வீரரான க்வாஜா பேர்த்தில் இன்று (14) ஆரம்பமாகும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான பாதணிகளை அணிந்திருந்தார். சமூக ஊடகத்திலும் காசா மக்களுக்கு ஆதரவை வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT