Sunday, April 28, 2024
Home » சீன முன்முயற்சியிலிருந்து வெளியேறுகிறது இத்தாலி

சீன முன்முயற்சியிலிருந்து வெளியேறுகிறது இத்தாலி

by gayan
December 12, 2023 12:34 pm 0 comment

சீனாவின் பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சி திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கு இத்தாலி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சார்பில் இராஜதந்திரக் குறிப்பொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக் குறிப்பில், இம்முன்முயற்சியில் இருந்து வெளியேறுகின்ற போதிலும் சீனாவுடன் மூலோபாய நட்பைப் பேண இத்தாலி விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சியின் பங்கேற்பை 2019 இல் இத்தாலி அங்கீகரித்தது. அந்த அங்கீகாரம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலாவதியாகக் கூடியதாகும். ஆனாலும் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த முன்முயற்சியில் இருந்து வெளியேறுவதற்கான முடிவை இத்தாலி அறிவித்துள்ளது. இல்லாவிட்டால் அந்த அங்கீகாரம் தானாகவே மேலும் ஐந்து வருடங்களுக்கு புதுப்பிக்கப்பட்டிருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT