Monday, April 29, 2024
Home » கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 83 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு சித்தி

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 83 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு சித்தி

by damith
December 4, 2023 5:55 am 0 comment

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 83 சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு சித்தி பெற்றுள்ளதாகவும் அதில் ஐந்து மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்தியினை பெற்றுள்ளதாகவும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் இரா சிவலிங்கம் தெரிவித்தார்.

கல்வி பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …

நுவரெலியா கல்வி வலயத்தில் கடந்த சில வருடங்களாக எட்டு பாடங்களில் தொடர்ச்சியாக நூறு சதவீதமான சித்தியினை பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் தொடர்ந்து கல்வியில் இந்த பாடசாலை வளர்ச்சியினை நோக்கி பயணித்துக்கொண்டிருகிறது.

கொட்டகலை தமிழ் வித்தியாலய தேசிய பாடசாலை 1931 ஆண்டு வூட்டன் தோட்டத்தில் ஒரு தோட்டப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. மலையகத்தில் இன்று ஒரு பெயர் சொல்லக்கூடிய ஒரு பாடசாலையாக குறித்த பாடசாலை வளர்ச்சிபெற்றிருக்கிறது.

இந்தப் பாடசாலையில் தற்போது 2300 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், 92 ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதாகவும், இதில் 90 சதவீதமான மாணவர்கள் தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றில் 50 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருப்பதாகவும் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 02 இடத்தினை பெற்றிருப்பதாகவும், தொழிநுட்ப ஆய்வு கூட வசதிகள் இல்லாத நிலையில் குறித்த துறையில் ஈடெக் பிரிவில் 10 இடத்தினை பெற்றிருப்பதாகவும்,உயரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றிருப்பதாகவும் அண்மையில் வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலும் 34 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலாக பெற்று சித்தி பெற்றிருப்பதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

(ஹட்டன விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT