Sunday, April 28, 2024
Home » வெளிநாட்டு இராஜதந்திரிகளால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் ‘த நியூஸ் பேப்பர்’

வெளிநாட்டு இராஜதந்திரிகளால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் ‘த நியூஸ் பேப்பர்’

by damith
December 4, 2023 10:52 am 0 comment

இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (01) இரவு அதன் இணை தயாரிப்பாளரான நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவின் அழைப்பின் பேரில், 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக ஜனாதிபதியின் விருதைப் பெற்ற The Newspaper திரைப்படத்தை PVC திரையரங்கில் காண வன் கோல்பேஸ் திரை அரங்கில் ஒன்றுகூடினர். இந்தியாவின் 13ஆவது பெங்களூர் திரைப்பட விழாவில், ஆசியாவின் இரண்டாவது சிறந்த படமாக விருது பெற்றதுடன், பணப் பரிசையும் பெற்ற திரைப்படமே த நியூஸ் பேப்பர்.

சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசை உள்ளிட்ட 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான ஜனாதிபதியின் விருதைப் பெற்ற “த நியூஸ் பேப்பர்” திரைப்படத்தின் தயாரிப்பாளரான அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் விசேட அழைப்பின் பேரில் இலங்கையின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவானோர் இந்த விசேட திரைப்படத் திரையிடலில் கலந்துகொண்டனர்.

மிகவும் காலத்துக்குப் பொருத்தமான கருப்பொருளில் உருவான “த நியூஸ் பேப்பர்” திரைப்படம் மிகவும் சிறப்பான திரைப்படம் என திரைப்படத்தைப் பார்த்த பலரும் கருத்துத் தெரிவித்தனர். 2023 ஜனாதிபதி திரைப்பட விருது விழாவில், சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமதுர இயக்கிய ‘த நியூஸ் பேப்பர் ‘ திரைப்படம், 2020 இல் திரையிடப்பட்ட படங்களில் அதிக விருதுகளை வென்ற திரைப்படமாகும். மற்றும் “விஸ்வ கீர்த்தி விருதையும் ” வென்றுள்ளது. இது மிகவும் தனித்துவமான விருதுகளில் ஒன்றாகும்.

கலாநிதி பந்துல குணவர்தன, எச்டி பிரேமசிறி, ரவீந்திர குருகே ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகச் செயற்பட்டதோடு ஆங்கில வசனங்களுடன் திரையிடப்பட்ட The News Paper திரைப்படம் இதற்கு முன்னரும் பல உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT