Monday, April 29, 2024
Home » வோக் ஜுவல்லர்ஸின் வாழ்நாள் உத்தரவாதம்

வோக் ஜுவல்லர்ஸின் வாழ்நாள் உத்தரவாதம்

by sachintha
November 23, 2023 10:05 am 0 comment

மகத்துவத்தின் அடையாளம் மற்றும் சிறந்த நகைகளுக்கான தரத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தனித்துவமான மற்றும் முக்கியமானதொரு ஸ்தானத்தைச் சம்பாதித்துள்ள வோக் ஜுவல்லர்ஸ், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியச் சிறப்புக் கொண்டது.

தற்போது இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படும் நாமமாக மாறியுள்ள வோக் ஜுவல்லர்ஸ், மாசுமறுவற்ற நகை வேலைப்பாடு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பெயர்பெற்றுள்ளது.

அதன் புகழ்மிக்க மணப்பெண் அலங்கார நகைத் தெரிவுகள் அடங்கலாக, வோக் ஜுவல்லர்ஸின் ஒவ்வொரு தலைசிறந்த படைப்பும் “என்றென்றும் உங்களுடன்” (with you forever) என்ற நிறுவனத்தின் உறுதிமொழிக்கு அமைவாக, வாழ்நாள் உத்தரவாதத்துடன் வெளிவருகின்றன.

வடிவமைக்கப்படுகின்ற ஒவ்வொரு நகையும் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் வகையில் நிலைபெறும் வண்ணம் அவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதை இது குறிக்கின்றது.

நகைகள் மீதான தனது அளவற்ற அபிமானம் மற்றும் மகத்துவம் மீதான அர்ப்பணிப்பு தொடர்பில் ஹேமசந்திர மிகுந்த உற்சாகத்துடன் கருத்து வெளியிடுகையில், “காலத்தால் அழியாத தலைசிறந்த படைப்புக்களாக நாம் ஒவ்வொரு நகையையும் வடிவமைப்பது மட்டுமல்லாது, எமது வாடிக்கையாளர்களுக்கு தரம், நம்பிக்கை மற்றும் செலுத்தும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில், மறக்க முடியாத அனுபவங்களாக அவற்றை மாற்றியமைக்கின்றோம்.

வோக் ஜுவல்லர்ஸில் தரத்திற்கு எவ்விதமான மறுபேச்சும் கிடையாது. ” என்று குறிப்பிட்டார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT