Monday, May 20, 2024
Home » பலஸ்தீன் விவகாரத்தில் உலகின் தோல்வியும், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்

பலஸ்தீன் விவகாரத்தில் உலகின் தோல்வியும், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்

- ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நவ. 15 கலந்துரையாடல்

by Rizwan Segu Mohideen
November 12, 2023 12:31 pm 0 comment

பலஸ்தீனின் காசாவில் இடம்பெறுகின்ற போர்க்குற்றங்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் மற்றும் மக்களை கொன்று குவிப்பதைத் தடுப்பதில் உலகத் தோல்வியின் தாக்கங்களும் அதனுடன் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களும் தொடர்பான கலந்துரையாடலொன்றினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது

“பலஸ்தீன விவகாரத்தில் உலகின் தோல்வியும்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல் நவம்பர் 15ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 5.00 மணிக்கு கொழும்பு 10, இல. 310, டி ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். செய்ட், இலங்கை ஜ.நா அலுவலக முன்னாள் தேசிய தகவல் அதிகாரி மொஹான் சமரநாயக்க, சமூக ஆர்வலர் எம்.என் முஹம்மட் ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்

இந்த முக்கியமான உலகளாவிய பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் இன மத பேதமின்றி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக்கலந்துரையாடல் தொடர்பான மேலதிக விபரங்களை மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீனுடன் (0772612288) தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT