Monday, April 29, 2024
Home » எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைகள் திறந்துவைப்பு
சாய்ந்தமருது

எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைகள் திறந்துவைப்பு

by mahesh
November 8, 2023 11:55 am 0 comment

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் நவீன கலையுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்களை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (08) காலை 08.30 மணிக்கு பாடசாலையில் நடைபெறும். பாடசாலையின் ஆரம்ப ஆசிரியர்கள், பெற்றோர்களின் பங்களிப்புடன் ஆரம்ப மாணவர்கள் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு, விசேட அதிதிகளாக, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம், ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கிர், ஆசிரிய ஆலோசகர்களான யூ.கே. அன்சார், எம்.எம்.எம்.றபீக், முன்னாள் ஆசிரிய ஆலோசகர் ஏ. சஹ்ரூன், பாடசாலையின் ஸ்தாபக அதிபர் ஏ.எல்.ஏ. நாபித், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நாஸர், பாடசாலைக்கு சகல விதத்திலும் உதவி வருகின்ற ஊடகவியலாளர்களான சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் மற்றும் செய்தியாசிரியர் பல்துறைக்கலைஞர், கலைச்சுடர் எம்.எஸ்.எஸ்.ஸாகிர் உட்பட பாடசாலை ஆரம்பப் பிரிவின் வகுப்பாசிரியைகளான எம்.பி. பாயிஸா, என்.எப். பைஸால், தரம் 2 வகுப்பாசிரியை கே. ஹப்ஸா, 03ஆம் ஆண்டு வகுப்பாசிரியை ஏ.எஸ். ஐனுல் சஜானா, 04ஆம் ஆண்டு வகுப்பாசிரியை எஸ்.எச். மர்சுக்னா, 05ஆம் ஆண்டு வகுப்பாசிரியை ஏ.டபிள்யூ. றினோஸியா மற்றும் ஏனைய வகுப்பு ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மிகவும் வறிய, பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலைக்கு தனவந்தர்கள் முன்வந்து உதவிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். முடியுமானவர்கள் இப்பாடசாலைக்கு தாராளமாக உதவிகளை வழங்கலாம்.

இப்பாடசாலையில் தரம் 01முதல் தரம் 09 வரை சுமார் 320 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT