272
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டது. இதன்படி, இப்பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான
நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.