Monday, April 29, 2024
Home » கென்ய பாடசாலையில் பரவியுள்ள மர்ம நோய்; கால்களில் பக்கவாத அறிகுறிகள்

கென்ய பாடசாலையில் பரவியுள்ள மர்ம நோய்; கால்களில் பக்கவாத அறிகுறிகள்

by Rizwan Segu Mohideen
October 8, 2023 7:24 am 0 comment

கென்யாவில் மர்ம நோய் பரவிவரும் நிலையில், 90க்கும் அதிகமான பாடசாலை மாணவர்களின் கால்களில் பக்கவாத அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

அதனால் பெரும்பாலான மாணவர்களால் நடக்க முடியவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செயின் தெரேசாசஸ் எர்கி என்ற பெண்கள் உயர்நிலைப் பாடசாலையின் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.

அந்தப் பாடசாலை காகாமெகா எனும் நகரில் அமைந்துள்ளது.

பாடசாலை காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளைச் சுகாதார அதிகாரிகள் சேகரித்துள்ளனர். கென்யாவின் மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அது அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு அந்த மர்ம நோய் குறித்து ஆராயப்படுகிறது.

மாணவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதைக் காட்டும் வீடியோ முன்னர் ட்விட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT