Monday, April 29, 2024
Home » நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ. வரை; சில பகுதிகளில் 100 மி.மீ. வரையும் மழை

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ. வரை; சில பகுதிகளில் 100 மி.மீ. வரையும் மழை

- மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
October 2, 2023 9:34 am 0 comment

– கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மழை

இன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT