அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பாணந்துறைக் கிளை நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் ஜீலான் மத்திய கல்லூரியின் உம்முல் மலீஹா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு போட்டியாக பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற அறிவுக்களஞ்சியம் போட்டியில் மொறட்டுவை அறபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அணி சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இறுதிப்போட்டியில் ஜீலான் மத்திய கல்லூரி அணியை 25 மேலதிக புள்ளிகளில் வெற்றிகொண்டு சாம்பியனாக தெரிவாகியது.
வெற்றியீட்டிய அறபாத் அணியின் உறுப்பினர்களான
அப்துல்லா சரூரி, சகரிய்யா கெளஸ், யூஸுப் யஸார்,
நவீத் நஜிப்தீன், உமர் ஹம்தான் நிப்ராஸ் ஆகியோர் கிடைத்த விருதுகளுடன் பொறுப்பாசிரியை ஸபா இர்ஷாதுடனும் படத்தில் காணப்படுகின்றனர்.
மொறட்டுவை மத்திய விசேட நிருபர்