Sunday, April 28, 2024
Home » தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் 90% ஆனோர் ஏமாற்றியுள்ளனர்

தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் 90% ஆனோர் ஏமாற்றியுள்ளனர்

by gayan
September 28, 2023 12:17 pm 0 comment

தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் 90 சதவீதமானோர் கடந்த வருடம் வரி செலுத்தாதிருந்தமை தெரியவந்துள்ளது. ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நிறுவனங்களில் 85 வீதமானோர் இவ்வரியை செலுத்தவில்லை. இவற்றில் 494 நிறுவனங்கள் மட்டுமே வரியை செலுத்தியுள்ளன. இது குறித்து தேசிய

பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடலை அமுல்படுத்துவதற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றித் தெரிவித்த அவர்.இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடு காரணமாக, அரசாங்கத்துக்கு வருடாந்தம் சுமார் 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் செயல்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். மேலும், தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் அமுலாக்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT