Thursday, May 2, 2024
Home » நெஸ்டமோல்ட் சைக்கிளோட்ட போட்டியில் மாகே முதலாமிடம்

நெஸ்டமோல்ட் சைக்கிளோட்ட போட்டியில் மாகே முதலாமிடம்

by damith
September 25, 2023 11:08 am 0 comment

நெஸ்டமோல்ட் சைக்கிளின் சலேஞ்ச் சைக்கிள் பந்தயத்தின் ஆடவர் கனிஸ்ட பிரிவில் எஸ்.எஸ்.எச் மாகே வெற்றியீட்டினார்.

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் நேற்று (24) ஆரம்பமான இந்தப் போட்டியில் 24 கிலோமிற்றர்கள் தூரம் கொண்ட கனிஷ்ட பிரிவு போட்டியில் எஸ்.எஸ்.எச் மாகே 43.49 நிமிடங்களில் போட்டித் தூரத்தை முடித்து வெற்றியீட்டினார். இவர் கதிரான ஸ்பீட் சைக்கிள் கழகத்தின் சார்பிலேயே போட்டியில் பங்கேற்றிருந்தார்.

இதில் களனி சைக்கிள் கழகத்தின் சார்பில் பங்கேற்ற எம்.ஏ.எஸ்.எச். சமரவீர இரண்டாம் இடத்தையும் வென்னப்புவ சைக்கிள் கழகத்தின் சார்பில் போட்டியில் பங்கேற்ற எம்.டி.டி. பெரேரா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த சைக்கிளோட்ட பந்தயத்தில் 08 போட்டிகளில் 650க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளுக்கு நெஸ்லே நெஸ்டமோல்ட் பூரண அனுசரணை வழங்கியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT