Monday, May 20, 2024
Home » சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் சர்வதேச லயன்ஸ் கழகம்

சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் சர்வதேச லயன்ஸ் கழகம்

by damith
September 11, 2023 3:06 pm 0 comment

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது இயங்கி வரும் கண்சிகிச்சை பிரிவை சர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவியுடன் மேலும் விஸ்தரிப்பது சம்பந்தமான கலந்துரையாடல், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான அன்பளிப்புகளை வழங்குதல் மற்றும் மரநடுகை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் சர்வதேச பணிப்பாளர் மகேஷ் பாஸ்கால், மாவட்ட ஆளுநர் இஸ்மத் ஹமிட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபா, சம்மாந்துறை லயன்ஸ் கழகத் தலைவர் றாபி, பிராந்திய லயன்ஸ் தலைவர் எம்.டி.எம். அனாப், திட்டமிடல் மருத்துவர் நியாஸ் அஹமட், ஆளுநர் செயலாளர் சிறிபால, பொருளாளர் தம்மிக மற்றும் லயன்ஸ் கழக முக்கியஸ்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT