Saturday, May 11, 2024
Home » ‘ஓயாத ஆளுமைகள்’ நூல் வெளியீடு நாளை

‘ஓயாத ஆளுமைகள்’ நூல் வெளியீடு நாளை

by Rizwan Segu Mohideen
July 31, 2023 12:03 pm 0 comment

காலி மாவட்ட ஓய்வு பெற்ற கல்வியிலாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ‘ஓயாத ஆளுமைகள்’ நூல்வெளியீட்டு விழா எதிர்வரும் முதலாம் திகதி (ஓகஸ்ட் 01) செவ்வாய்க்கிழமை மு.ப. 9.00 மணிக்கு காலி முஸ்லிம் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் கலாபூஷணம் ஏ.சி.எம். ஜிப்ரி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானப் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்வதோடு மின்சக்தி எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நுர் ரிஸ்னா அனீஸ் விசேட அதிதியாக கலந்து கொள்கிறார்.

கௌரவ அதிதிகளாக தென் மாகாண முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே. மொஹமட், தென்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் தமிழ்) அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மசாயிர், பிரதம பொறியியலாளர் மொஹமட் இஸ்மத், எலிஜன் ஜுவலரி உரிமையாளர் எஸ்.எச்.எம். நிசாம், சீ பெயார் நிறுவன பணிப்பாளர் ஏ.எச்.எம். அம்ஜத், லங்கா ஜெம் என்ட் ஜுவலரி முகாமைத்துவப் பணிப்பாளர் இப்லால் குத்தூஸ், மாணிக்கக் கல் வர்த்தகர் ஏ.டபிள்யு.எம். பாரூக், தௌபீக் செரமிக் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ரீ. அக்ரம், லங்கா ஹாட்வெயார் உரிமையாளர் சப்ராஸ் மொஹமட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

‘ஓயாத ஆளுமைகள்’ நூலை முன்னாள் ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். ஹிசாம் தொகுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT