Home » இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் சேவை 2026 ஆம் ஆண்டு ஆரம்பம்; ஏற்பாடுகள் துரிதம்

இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் சேவை 2026 ஆம் ஆண்டு ஆரம்பம்; ஏற்பாடுகள் துரிதம்

by sachintha
April 30, 2024 8:50 am 0 comment

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையை அகமதாபாத்-_ மும்பை இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

508 கி.மீ. தொலைவிலான இந்த ரயில் பாதையை நெஷனல் ஹை-ஸ்பீட் ரயில் ​ேகார்ப்பொரேஷன் லிமிடெட் அமைத்து வருகிறது.

இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புல்லட் ரயில் திட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சுரங்கப்பாதைகள், தூண்கள், அடித்தளங்கள் போன்ற பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

35 கி.மீ. தொலைவிலான சுரங்கப்பாதைகளில் இருப்புப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. முழுப்பாதையையும் அமைப்பதற்கான டெண்டர்களும் குஜராத்தில் இருப்புப்பாதை அமைக்கும் டெண்டர்களும் இறுதி செய்யப்பட்டு விட்டன.

2026 ஆம் ஆண்டில் சூரத்துக்கும் பிலிமோராவுக்கும் இடையே சோதனை ஓட்டங்கள் நடைபெறும் என்றார். மகாராஷ்டிராவில் திட்டத்துக்குத் தேவையான நிறைய நிலங்கள் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல், கொவிட் தொற்று காரணமாக தாமதம் அடைந்தது.

முதல் பாகமான சூரத்துக்கும் பிலிமோராவுக்கும் இடையிலான 50 கி.மீ. 2026 ஓகஸ்ட்டில் முடிவடையும்.

புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரம் 58 நிமிடங்களில் கடக்கும். 10 ரயில்நிலையங்களில் நிற்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT