Monday, May 20, 2024
Home » Spark: இளைஞர் தொழில்முனைவோர் போட்டி 2023 பெரு வரவேற்பு; 2ஆம் கட்டத்திற்கு முன்னேற்றம்

Spark: இளைஞர் தொழில்முனைவோர் போட்டி 2023 பெரு வரவேற்பு; 2ஆம் கட்டத்திற்கு முன்னேற்றம்

by Rizwan Segu Mohideen
July 18, 2023 11:34 am 0 comment

Spark: இலங்கை இளைஞர்களின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தி தொழில்முனைவு உலகில் வெற்றி பெறும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் உலக தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 2023 மே 31 ஆம் திகதி இளைஞர் தொழில்முனைவோர் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. . 15-24 வயதுக்குட்பட்ட இளம் சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் இலங்கை சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், இந்தப் போட்டியானது எமது இளைஞர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் யோசனைகள் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. SPARK தனது போட்டியாளர்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டுதல், முதலீடுகள், முக்கிய நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் ஒரு தொழிலதிபராக ஒருவரின் வளர்ச்சிக்குக் கருவியாக இருக்கும் பிற பகுதிகளில் ஆதரவை வழங்க திட்டமிட்டுள்ளது.

SPARK ஆனது இலங்கை முழுவதிலுமிருந்து 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது, மேலும் போட்டி ஏற்கனவே அதன் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது, இதில் தெரிவுசெய்யப்பட்ட முதல் 100 போட்டியாளர்கள் மட்டுமே சிறந்த பரிசுக்கான போட்டியில் இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு தொழில்முனைவோர் நிபுணர்களால் நடத்தப்படும் பூட்கேம்ப்கள், பட்டறைகள் மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை அமர்வுகளுக்கான அணுகல் உட்பட பல வெகுமதிகள் வழங்கப்படுகின்றன, இது தலைமைத்துவ மற்றும் தகவல் தொடர்பு பண்புகளை மேம்படுத்தும் மற்றும் இளம் தொழில்முனைவோராக அவர்களின் ஆளுமைகளை மேம்படுத்தும். ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு வெளி நாடுகளுக்கான சுற்றுப்பயணங்கள் உட்பட மதிப்புமிக்க விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

SPARK 2023 என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வரும் ஒரு பாரிய திட்டமாகும், மேலும் இது இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் அனுசரணை நடாத்தப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT