தேசிய சுவடிகள் காப்பக தினம்: நாளை கொழும்பில் விழா

இலங்கை தேசிய சுவடிகள் காப்பகம் () கடந்த 30.05.2023 இல் ஆவணங்கள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்துக்கு தனது ஆதரவை அறிவித்து, அதன் பரப்புரையை உறுதி செய்துள்ளது. இதற்கிணங்க நாளை 9ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகமானது 'தேசிய சுவடிகள் காப்பக தினம்' கொண்டாடவுள்ளது.

இந்த நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறும். பிரதம விருந்தினராக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக பங்கேற்பார். அதிதிகளாக நாலக குணவர்தன, தனுஜா துரைராஜா மற்றும் நைஜல் நுகவெல ஆகியோர் கலந்து கொள்வர்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களையும் கலந்துகொள்ள தேசிய சுடிவகள் காப்பகம் அழைப்பு விடுக்கிறது. பதிவுகளுக்கான விபரங்களை 011 2636917 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ அல்லது தேசிய சுவடிகள் காப்பகத்தின் முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் ஊடாகவோ அணுகலாம்.

காப்பகங்களுக்கான சர்வதேச கவுன்ஸிலால் () உருவாக்கப்பட்டதும், 2011 இல் பாரிஸில் நடந்த 36 ஆவது மாநாட்டில் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டதுமான காப்பகங்களுக்கான உலகளாவிய பிரகடனம், சமூகத்தில் காப்பகங்களில் முக்கியத்துவம், வினைத்திறனான முகாமைத்துவம், பாதுகாப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆவணங்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. இலங்கை தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் இல் நிறுவன அங்கத்துவத்தையும் பெற்றுள்ளது. இலங்கையின் எழுத்தாவணப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அணுகுவதற்கும் பொறுப்பேற்றுள்ள முன்னணி நிறுவனமாக, தேசிய சுவடிகள் காப்பக சமூகத்தில் காப்பகங்களின் பங்கை கோடிட்டுக் காட்டுவது மிக முக்கியமானதாகும். பிரகடனத்தை ஆதரிப்பதன் மூலம், தேசிய சுவடிகள் காப்பகம் தேசத்தின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இந்த பிரகனடம் உத்தியோகபூர்வமாக சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஜூன் 09 ஆம் திகதி வெளியிடப்படும்.

'காப்பகங்கள் தொடர்பாக உலகளாவிய பிரகனடத்தை ஆதரிப்பதில் இலங்கை தேசிய சுவடிகள் காப்பகம் பெருமை கொள்கிறது' என பணிப்பாளர் நாயகம் (தேசிய சுடிவக்கூடம்) கலாநிதி நதீரா ரூபசிங்க தெரிவித்தார்.

காப்பகங்கள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்திற்கு ஆதரவளித்தல் மற்றும் சமூகத்தில் காப்பகங்களின் மதிப்பை ஊக்குவிப்பதற்காக இலங்கை தேசிய சுவடிகள் காப்பகம் மற்ற நிறுவனங்களையும் தனிநபர்களையும் இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இதில் ஆர்வமுள்ள தரப்பினர் ஜூன் 09 ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்தில் அல்லது www.ica.org என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பதிவேட்டில் கையொப்பமிடலாம்.

கலாநிதி நதீர ரூபசிங்க

பணிப்பாளர் நாயகம் தேசிய

சுவடிக்கூடம் [email protected]

தொலைபேசி இல.: 011 2671042/ 011 3696917/076 8874158

தொலைநகல் இல: 0112 694419


Add new comment

Or log in with...