ஆர்ப்பாட்டம் வலுத்ததால் பின்வாங்கினார் நெதன்யாகு

ஆர்ப்பாட்டங்கள் வலுத்ததை அடுத்து இஸ்ரேல் நீதித் துறையை சீரமைக்கும் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஒத்திவைத்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு எதிராக பல மாதங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு தொழிற்சங்கங்களின் போராட்டம் வலுத்து அரசுக்குள்ளும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

'பேச்சுவார்த்தை ஊடாக சிவில் யுத்தம் ஒன்றை தவிர்ப்பதற்கு வாய்ப்பு ஒன்று கிடைக்கும்போது, பிரதமராக பேச்சுவார்த்தைக்கான நேரத்தை எடுத்துக்கொள்வேன்' என்று தேசிய தொலைக்காட்சியில் திங்கட்கிழமை உரையாற்றிய நெதன்யாகு குறிப்பிட்டார். இந்தத் தாமதத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலம் வரும் ஏப்ரல் இறுதி வரை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

நீதிமன்ற செயற்பாடுகளை பாராளுமன்றம் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த சீர்திருத்தம் உள்ளது. இது இஸ்ரேலிய வரலாற்றில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குத் தூண்டியது. இந்தத் திட்டத்தை எதிர்த்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சரை நெதன்யாகு பதவி நீக்கியதை அடுத்து கடந்த திங்களன்று (27) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுத்தன. நெதன்யாகுவின் அறிவிப்பை அடுத்து இஸ்ரேலில் அமைதி நிலை திரும்பியுள்ளது.


Add new comment

Or log in with...