IMF தீர்மானம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று

- ஜனாதிபதி இன்று விசேட உரை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொடர்பான தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கான IMF பிரதானி இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 8.30 மணிக்கு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று இரவு கூடி இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்தத் தீர்மானம் தொடர்பில் குறித்த அறிவிப்பை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக 320 மில்லியன் அமெரிக்கன் டொலரை வழங்கவுள்ளதுடன் அந்த நிதி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டுக்குக் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் நான்கு வருடங்களுக்காக 8 தடவைகளில் அந்த முழுமையான நிதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமானது தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் நம்பிக்ைகயை கட்டியெழுப்பியுள்ளதுடன் அதற்கான அனுமதியை நேற்றைய தினம் சர்வதேச நாணயம் வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...