முன்னாள் பாப்பரசர் உடல்நிலை மோசம்

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகவும் வத்திக்கான் வந்திருக்கும் யாத்திரிகர்கள் அவருக்காக பிரார்த்திக்கும்படியும் பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

95 வயதாகும் பாப்பரசர் பெனடிக்ட் 600 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருச்சபையில் முதல் பாப்பரசராக 2013 ஆம் ஆண்டு பதவி விலகினார். தனது வயது மூப்பு காரணமாகவே அவர் அந்த முடிவை எடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆண்டின் இறுதி யாத்திரிகர் சந்திப்பில் பங்கேற்ற பதவியில் உள்ள பாப்பரசர் பிரான்சிஸ், முன்னாள் பாப்பரசர் பெனடிக்டுக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டார். அண்மைய மணி நேரங்களில் முன்னாள் பாப்பரசரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது. “நிலைமை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சோதித்து வருகின்றனர்” என்று பேச்சாளர் மட்டியோ புரூனி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...