திலிணி பிரியமாலி சிறைச்சாலை நீதிச்சபை முன்னிலையில் ஆஜர்

விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டது

பாரிய நிதி மோசடியில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகித்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலை  நீதிச்சபை முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் சட்ட மற்றும் நியதிகளின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களுக்குள் கையடக்கத் தொலைபேசி உள்ளடங்கும்.

எனினும் அவர் கையடக்கத்தொலைபேசியொன்றை தம்வசம் வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டில் அவரை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறைச்சாலை நீதிச்சபை முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான நிதியை மோசடிசெய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...