புதுக்குடியிருப்பில் சிரட்டை கைவினை பயிற்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் முகமாக கைவினை உற்பத்திகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில்  பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 20பெண்களுக்கான சிரட்டை கைவினை பயிற்சி வகுப்புகள் நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது.

யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய 1986-−1995 வரையான பழைய மாணவர்களின் முழுமையான அனுசரனையுடன் புதுக்குடியிருப்பு சிவில் பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி பட்டறையின் தொடக்க நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சஞ்சீவன், பெண்கள் பிரதிநிதிகள் சார்பாக மனோன்மணி, மூதறிஞ்ஞர் சத்தியமூர்த்தி, முன்னால் அதிபர் ச.கனகரத்தினம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...